கோவையில் தனியார் உணவு டெலிவரி ஊழியரை கொடூரமாக தாக்கி - செல்போன், இரு சக்கர வாகனம், பணம் பறிப்பு..!

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சாய்பாபா காலனி போலீசார் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதற்காக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவையில் தனியார் உணவு டெலிவரி ஊழியரை கொடூரமாக தாக்கி செல்போன், இரு சக்கர வாகனம், பணம் பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பலையூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் என்பவரது மகன் ஸ்ரீ விக்னேஷ் (18). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள ஸ்ரீ விக்னேஷ், தனியார் உணவு டெலிவரி (zomato) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல ஸ்ரீ விக்னேஷ் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் வந்துள்ளார். அப்போது ஏ.ஆர்.சி சந்திப்பு அருகே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் ஸ்ரீ விக்னேஷ் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அவரை மது அருந்த வருமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அவர் வர மறுத்ததால் அவரது இரு சக்கர வாகனத்தை அந்த மர்ம நபர்கள் பிடுங்கியுள்ளனர். இதனால் அவர்களுடன் ஸ்ரீ விக்னேஷ் கவுடம்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளடாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு அந்த மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு மீண்டும் விக்னேஷை மிரட்டி இரத்தினபுரி ரயில்வே தண்டவாளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இருந்த மேலும் சில நபர்களுடன் சேர்ந்து அந்த மர்ம கும்பல் ஸ்ரீ விக்னேஷ் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

இதில் படுகாயமடைந்தஅவரிடமிருந்த 22 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.1,500 பணம் மற்றும் இரு சக்கர வாகனத்தை அந்த மர்ம கும்பல் பறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் முகம், தலை, முதுகு பகுதியில் கடுமையான காயங்களுடன் ஸ்ரீ விக்னேஷ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலனி போலீசில் அவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதற்காக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...