இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஒரே மாதிரியான உடை அணிந்து உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணி மேற்கொண்டனர்.
கோவை: 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் மாவட்ட நிர்வாகமும் உணவு பாதுகாப்பு துறையும் இணைந்து உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

கோவையில் இன்று மாவட்ட நிர்வாகமும் உணவு பாதுகாப்பு துறையும் இணைந்து உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த பேரணி வ.உ.சி மைதானத்தில் தொடங்கி நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் முடிவடைந்தது.
இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணி மேற்கொண்டனர்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெறும் இந்தப் பேரணியை அனைவருக்கும் எடுத்துக் கூறும் வகையில் அனைவரும் ஒரே மாதிரியான உடை அணிந்து கொண்டு பேரணியில் பங்கேற்றனர்.

இதில், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கோவை துணை மேயர் வெற்றிச்செல்வன் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறிது தூரம் மாணவர்களுடன் பேரணி மேற்கொண்டனர்.