கோவை மாவட்ட திமுக இளைஞரணியினர், மாணவரணியினர், மகளிரணியினர், துணை அமைப்பாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். மாவட்ட திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.
கோவை: கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள் அக்ஷயா (தனியார்) ஹோட்டலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுகவினரின் ஆலோசனை கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக இளைஞரணியினர், மாணவரணியினர், மகளிரணியினர், துணை அமைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை மாவட்ட திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

மேலும் இரு வாரங்களில் முதல்வர் கோவை வர வாய்ப்பு உள்ளதாகதெரிவிக்கப்படும் நிலையில், கட்சி சார்ந்த ஏதேனும் நிகழ்ச்சிகள் குறித்தும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது.
