இரவு முழுவதும் மழை பெய்த நிலையில், கோவையில் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு காணப்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட வாறு வாகனங்களை இயக்கி சென்றனர்.
கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் காலை 11 மணி வரை பனி மூட்டமாக காணப்பட்டதால் முகப்பு விளக்குகளை எரியவிட்ட வாறு வாகன ஓட்டிகள் வாகனங்களை இயங்கினர்.

கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று இரவு முழுவதும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.

இந்நிலையில் அதிகாலை முதல் ராமநாதபுரம், சுந்தராபுரம், மதுக்கரை சாலை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் நிலவியது. இதில் மதுக்கரை சாலையில் பொழிந்த கடுமையான பனிமூட்டத்தால் போத்தனூரில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்கப்பட்டது.
அதே போல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட வாறு சென்றனர். காலை 11 மணி வரையும் பனிமூட்டம் காணப்பட்டதால், ஊட்டி போல கோவை காணப்பட்டது.