பொள்ளாச்சி அருகே போலீஸ் அதிரடியில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

பொள்ளாச்சி அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்த போலீசார், வாகனங்கள், 30 சேவல்கள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்புறங்களில் சட்டவிரோதமாக சேவல் சண்டை மூலம் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

இதனையடுத்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் காளியாபுரம் பகுதியில் லோகநாதன் என்பவரது தோட்டத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பின்னர் அங்கு விரைந்த போலீசார் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதில் பொள்ளாச்சி, வடக்கிபாளையம், கிணத்துக்கடவு, கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 14 பேர் பிடிபட்டனர்.



அவர்களிடமிருந்து கார், சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனம் என 36 வாகனங்களும், 30 சேவல்களும், ரூபாய் 13 ஆயிரத்து 360 பணம் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.



இதனையடுத்து 14 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த வடக்கிபாளையம் போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறனர்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் கைது செய்து வைத்திருந்த, 22 வயதான கேரளாவை சேர்ந்த விஷ்ணு என்பவர் கண்ணாடியை உடைத்து, தனது கைகளில் காயத்தை ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்தவரை புரவிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அவரை தடுத்ததால் மேலும் அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...