திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை அலுவலகத்தை விவசாயிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்: மனுவை வாங்காமல் எழுந்து சென்ற அதிகாரி..!

விவசாயிகள் மற்றும் பொதுமக்களை இணை இயக்குனர் அவமதித்ததாக கூறி வெளியே வந்த விவசாயிகள் மனு நகலைக் கிழித்தெறிந்து கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளை சாபம் விட்டவாறு சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை அலுவலகத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மனுவை வாங்காமல் எழுந்து சென்ற அதிகாரியால் விவசாயிகளை அதிருப்தி அடைந்தனர்.



திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் இச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் 34-கல் குவாரிகள் இயங்கி வருவதாகவும், இதனால் அப்பகுதியில் வாழக்கூடிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு மட்டுமல்லாது கல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக அபாயகரமான வெடிபொருட்கள் வெடிக்க செய்வதால் அதிலிருந்து வரும் புகை மற்றும் அதிபயங்கர ஒளியால் அருகில் குடியிருக்கும் குடும்பங்களும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மேலும், கல் குவாரிகளில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையால் நிலத்தடி நீர் மட்டுமல்லாது, அப்பகுதி நீர்நிலைகளும் மாசுபட்டு விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே கல் குவாரிகள் மீது சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கோடங்கி பாளையம் இச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர்.



தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிம வளத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்க சென்ற போது மாவட்ட கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் வள்ளலிடம் மனு அளிக்க முயன்ற போது விவசாயிகள் மற்றும் இணை இயக்குனரிடைய வாக்குவாதம் ஏற்பட்டது.



இதனை அடுத்து, மனுவை வாங்க மறுத்த இணை இயக்குனர் விவசாயிகளை புறக்கணித்து அலுவலகத்திலிருந்து வெளியேறினார்.



இதனை கண்டிக்கும் வகையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் சமரச பேச்சுக்கு பின்பு மீண்டும் மனு அளிக்க சென்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களை இணை இயக்குனர் அவமதித்ததாகக் கூறி வெளியே வந்த விவசாயிகள் மனு நகலைக் கிழித்தெறிந்து கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளை சாபம் விட்டவாறு சென்றனர்.



இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...