'தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்' - கோவையில் ஒட்டப்பட்ட பாஜகவின் போஸ்டர்களால் சலசலப்பு..!

பிரதமர் மோடி செஸ் விளையாடுவது போன்ற புகைப்படத்துடன் 'தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்' என்ற வாசகங்களுடன் லங்கா கார்னர், டவுன்ஹால் உட்பட பல இடங்களில் பா.ஜ.க சார்பில் சிவா என்பவர் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.



கோவை: கோவையில் பிரதமர் மோடி செஸ் விளையாடுவது போன்ற புகைப்படத்துடன் 'தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்' என்ற வாசகங்களுடன் பாஜகவினர் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

கோவை லங்கா கார்னர், டவுன்ஹால் உட்பட பல இடங்களில் பா.ஜ.க சார்பில் சிவா என்பவர் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பிரதமர் புகைப்படம் மற்றும் பாஜக கொடியுடன் உள்ள பெரிய போஸ்டர்கள் நகரின் பல இடங்களில் ஒட்டியுள்ளனர்.



அதில் பிரதமர் செஸ் விளையாடுவது போலவும் புகைப்படம் இடம் பெற்றுள்ளதுடன் "தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்" என்ற வாசகங்கள் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி சென்னை வந்திருந்த பிரதமர் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் 29-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கு பெற்று விட்டு அகமதாபாத் சென்றார். பிரதமர் வந்தபோது தமிழகம் வந்த பிரதமரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

அதில், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பற்றியும், வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜகவினர் தலைவரின் ஆட்டம் ஆரம்பம் என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவினர் இரு அணியாகப் பிரிந்து இருக்கும் நிலையில், இந்த அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...