குளங்களில் டீசல் படகுகள் செலுத்துவதால் மீன்கள் உயிரிழக்க கூடும்-கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு..!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ள உக்கடம் பெரியகுளம், வாளாங்குளம் ஆகிய இரு குளங்களிலும் டீசல் படகுகள் செலுத்துவதால் மீன்கள் உயிரிழக்க கூடும் என கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ள குளங்களில் டீசல் படகுகள் செலுத்துவதால் மீன்கள் உயிரிழக்க கூடும் என கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



அவர்கள் அளித்த மனுவில், கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மீன்வள உதவி இயக்குநர் ஒதுக்கீட்டின் படி, 2019-2023 வரை 11 குளங்களை தந்துள்ளீர்கள். நாங்கள் மீன் குஞ்சு இருப்பு செய்து மீன்பிடித்து வருகிறோம்.



இந்த குளங்களை நம்பி 500-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாளாங்குளம் ஆகிய இரு குளங்களிலும் டீசல் படகுகள் விடுவதற்காக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நாங்கள் பெடல் படகுகள் விடுவதாக எண்ணினோம் தற்போது டீசல் படகுகள் விடுவதால் குளத்தில் உள்ள மீன்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் வாசம் வரும், இதனால் குளங்களில் டீசல், பெட்ரோல் படகுகள் விடுவதை தவிர்க்கவும் என குறிப்பிட்டிருந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலத்தில் உள்ள ஏரியில் டீசல் படகுகள் பயன்படுத்தியதால் தான் டீசல் வாசத்தினால் மீன்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...