கோவை பில்லூர் அணையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு..!

மாநகராட்சி முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பில்லூர் அணையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து நீரேற்று பகுதிக்கு சென்று நீரேற்று மையத்தை பார்வையிட்டர்.


கோவை: கோவை பில்லூர் அணையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அண்மையில் பெய்த தென்மேற்கு பருவ மழையின் போது, பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும், பில்லூர் அணை நீர் மாநகராட்சி பகுதியில் முக்கிய குடிநீர் ஆதாரம் என்பதால், போதிய மழை பொழிவு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



இந்நிலையில், கோவை மாநகராட்சி முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பில்லூர் அணையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதனை தொடர்ந்து நீரேற்று பகுதிக்குச் சென்று நீரேற்று மையத்தை பார்வையிட்டர்.



அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பிறகு பில்லூர் வாட்டர் போர்டு, பம்பிங் மையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது நீரேற்று மையத்திலிருந்து பம்பிங் மையத்திற்கு அனுப்பப்படும் நீரின் அளவு, மற்றும் சுத்திகரிப்பு மற்றும் பம்பிங் மையத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு, குடிநீர் தரம் உள்ளிட்டவை குறித்து ஆணையாளர் பிரதாப் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாநகரப் பொறியாளர் (பொ) எஸ்.அரசு, செயற்பொறியாளர், முருகேசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், ஜான்சன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர், பாலமுருகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் சித்ரா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் நேரில் சென்றனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...