இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் வங்கி மேலாளரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் வங்கியில் பணம் போடுவதாக கூறி, பெண்ணிடம் ரூ.15-லட்சம் மோசடி செய்த தனியார் வங்கி மேலாளரை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ராணி(49). அதே பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (45). இவர்கள் இருவரும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் என்பதால் தோழிகளாக பழகி வந்தனர்.
ராணி தனது வீட்டில் ரூ.15-லட்சம் வைத்திருந்தார். இதனை அறிந்த பாக்கியலட்சுமி அவரிடம் சென்று, எதற்கு இவ்வளவு பணத்தை கையில் வைத்துள்ளீர்கள் என்று கேட்டதாக தெரிகிறது. அப்போது ராணி சில ஆண்டுகள் கழித்து தனது மகள் திருமணத்திற்கு தேவைப்படும், அதற்காகவும், தனது மருத்துவ செலவிற்காகவும் வைத்துள்ளேன் என்று கூறினார்.
அதற்கு பாக்கியலட்சுமி, எனது மகன் சதுரகிரி வேதகிரிநாதன்(35) தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். அவரின் வங்கியில் பணத்தை செலுத்தி விடலாம். அவ்வாறு செலுத்தினால் திருமண காலம் வரும் வரை அதிக வட்டி கிடைக்கும் என்று தெரிவித்தார்.
இதனை நம்பி ராணி, அவரிடம் ரூ.15-லட்சத்தை கொடுத்தார். சில ஆண்டுகள் கழித்து ராணி, பாக்கியலட்சுமியிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அப்போது அவர் தந்துவிடுவதாக கூறி நாட்களை கடத்தி வந்தார். ஆனால் இதுவரை அவர் பணத்தை திருப்பி தரவில்லை.
அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராணி, இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதுரகிரி வேதகிரிநாதனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.