ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH) கோவை கிளையின் சார்பாக இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா..!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவையில் நடத்தி வரும் நான்கு தையில் பயிற்சி மையங்களில் ஆறு மாத மற்றும் தொழில் பயிற்சி பெற்ற தேவையுடைய, ஆதரவற்ற விதவை பெண்களுக்கு சுயதொழில் தொடங்கவும், பெண்கள் தற்சார்பு நிலை மற்றும் முன்னேற்றத்திற்காகவும் 74-தையல் இயந்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது.



கோவை: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளையின் சார்பாக நேற்று (26/07/22) 74-குடும்பங்களுக்கு ‘இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா’ போத்தனூர் சாலையில் உள்ள ஃபாத்திமா கனி திருமண மண்டபத்தில்நடைபெற்றது.



ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவையில் நடத்தி வரும் நான்கு தையில் பயிற்சி மையங்களில் ஆறு மாத மற்றும் தொழில் பயிற்சி பெற்ற தேவையுடைய, ஆதரவற்ற விதவை பெண்களுக்கு சுயதொழில் தொடங்கவும், பெண்கள் தற்சார்பு நிலை மற்றும் முன்னேற்றத்திற்காகவும் 74-தையல் இயந்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது.



ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர் ஜனாப்.P.S.உமர் ஃபாரூக் தலைமை உரை நிகழ்த்தினார். ராபிதத்துல் உலமா பேரவை மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி சிறப்புரை நிகழ்த்தினார்.

இறைவனை புரிந்து கொண்டு அவனை மட்டுமே வணங்குவதுடன் இன்னல் படும் மக்களுக்கு கை கொடுத்து உதவுவதையும், இஸ்லாம் கடமையாகவே போதித்துள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலமே இறை உவப்பை பெற முடியும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.



இவ்விழாவில் ரமணன் (கோவை மாவட்ட சிறுபான்மை நல அலுவலர், துணை ஆட்சியர்), O.A. பாலு (நிர்வாக இயக்குனர், Roots Cast Pvt Ltd), ஹேமலதா அண்ணாமலை (Ampere மின்சார வாகனங்கள் உரிமையாளர்), அனுஷா ரவி (CEO, பார்க் கல்விக் குழுமங்கள்), ஜனாப்.சம்சு அலி (சென்னை மொபைல்ஸ் உரிமையாளர்), நிர்மலா மகளிர் கல்லூரி செயலாளர், டெக்ஸிட்டி கல்லூரி தலைமை ஆசிரியர், அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி தலைமை ஆசிரியர், கர்மல் கார்டன் பள்ளியின் தாளாளர் & தலைமையாசிரியர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக மகளிர் அணி தலைவி ஜனாபா. கதீஜா காஜா, கோவை மகளிர் அணி தலைவி ஜஹீனா அஹமத், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மக்கள் தொடர்பு செயலாளர் ஜனாப்.அப்துல் ஹக்கீம், அரபா ஸ்டோர்ஸ் குழுமத்தின் உரிமையாளர் ஜனாப்.ஹாசிம் ஆகியோர் பயனாளர்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி வாழ்த்தினர்.



மாவட்ட நிர்வாகத்தினர், கல்வியாளர்கள், சமூக சேவையாளர்கள், ஆன்றோர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வினை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை தெற்கு மண்டலத் தலைவர் முனைவர் சையது அபுதாஹிர் ஒருங்கிணைத்தார்.



Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...