கோவை வால்பாறை அருகே தேநீர் கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள்..!

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் ஆரம்பித்து உள்ள நிலையில், வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே தேனீர் கடையை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு வழியாக மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகளையும், மளிகைக் கடைகளையும், சத்துணவு மையங்களையும், உணவு தேடி சேதப்படுத்தி வருகிறது.

வனத்துறையினர் யானைகளை விரட்டி வருகின்றனர். மக்கள் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள்அச்சத்தில் உள்ளனர். நேற்றிரவு வால்பாறை அருகே தனியாருக்குசொந்தமான நல்லமுடி எஸ்டேட் பகுதியில் தேநீர் கடை உள்ளது. வனப்பகுதிக்குச் சொந்தமான வனத்துறைக்கு சொந்தமான பூஞ்சோலை காட்சி முனை பகுதி உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். அப்பகுதியில் எஸ்டேட் நிர்வாகம் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறது. அதை ராஜா என்பவர்வேலை செய்து வருகிறார்.



நேற்று இரவு காட்டு யானைகள் 7 அப்பகுதிக்கு வந்து கடையை உடைத்து சேதப்படுத்தியது, கடை ஜன்னல் கதவு போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தியது.கடையில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ், ஸ்டவ், உணவுப் பொருட்கள் போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அப்பகுதியிலிருந்து விரட்டினர்.

காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...