சிறு விவசாயிகளின் பகுதி நிலங்களை, விதிகளின்படி, கால தாமதமின்றி, பத்திரப்பதிவு செய்ய, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன் அறிக்கை..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு, சிறு விவசாயிகளின் பகுதி நிலங்களை, விதிகளின்படி, கால தாமதமின்றி, பத்திரப்பதிவு செய்ய, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


கோவை: சிறு விவசாயிகளின் பகுதி நிலங்களை, விதிகளின்படி, கால தாமதமின்றி, பத்திரப் பதிவு செய்ய, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,

தமிழகத்தில் சிறிய அளவிலான நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் தான் அதிகம். குடும்பத்தில், திருமணம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்காக பெரிய செலவுகள் வரும்போது, விவசாய நிலங்களின் ஒரு பகுதியை விற்றே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் 20 முதல் 50 சென்ட் வரையிலான விவசாய நிலங்களை, சட்டப்படிபதிவு செய்வதற்கு விதிமுறைகள் உள்ளன. ஆனாலும், பதிவு செய்ய முடியாமல் விவசாயிகளும், பொதுமக்களும்தவித்து வருகிறார்கள்.

பதிவுத்துறை அமைச்சரிலிருந்து, அத்துறையில் இருப்பவர்களின், சட்ட விதிகளுக்கு எதிரான, வரம்பு மீறிய தலையீடுகளே இதற்கு காரணம் என புகார்கள் வருகின்றன. தமிழக பதிவுத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, அதன் தினசரி நிர்வாகத்தில் அமைச்சர் மூர்த்தி அவர்களின் அதீத தலையீடு உள்ளதாக புகார்கள் குவிகின்றன.

இது பதிவுத் துறை பணியாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள் உள்பட அனைவரையும் பாதித்து வருகிறது. தனது கவனத்திற்குக் கொண்டு வராமல் 20-சென்டிற்கு மேலான நிலப் பதிவை செய்யக் கூடாது என, அமைச்சரே வாய்மொழி உத்தரவிட்டு இருப்பதாக பதிவுத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

2018-மற்றும் 2020-வரையிலான பதிவுத்துறையின் பல சுற்றறிக்கைகளில், விவசாயிகள் சிறு விவசாய நிலங்களை விற்க வழிவகை உள்ளது. அதன்படி, பதிவுகள் மேற்கொள்பவர்களை அமைச்சர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இதனால் பல ஆவணங்கள், பதிவு முடியாமல் நிலுவையில் உள்ளன. அமைச்சரைப் பார்த்த பிறகே வேலையை முடிக்க முடிவதாக புகார்கள் வருகின்றன.

தமிழக பதிவுத் துறையில் பணிபுரியும் சார் பதிவாளர்களும், ஊழியர்களும் மிகுந்தஅழுத்தத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதுவரை சுமார் 75 சார்பதிவாளர்கள், பணியாளர்களை அமைச்சர் மூர்த்தி தற்காலிக பணி நீக்கம் செய்திருக்கிறார்.

இந்த விவரங்கள் சார்பதிவு அலுவலகங்களிலும், ஆவண எழுத்தர்களிடமும் விசாரித்தாலேதெரிகிறது.பதிவுத்துறை பணியாளர்கள் இது குறித்துப் பேசவே அஞ்சுகிறார்கள். சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறி வரும், முதலமைச்சரின் கவனத்திற்கு உட்பட்டே இது நடக்கிறதா? அல்லது பதிவுத்துறை அமைச்சர் மட்டுமே இதை செய்து வருகிறாரா? என்பதற்கு முதலமைச்சர் தான் பதிலளிக்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதில் தலையிட்டு, சிறு விவசாயிகளின் பகுதி நிலங்களை, விதிகளின்படி, கால தாமதமின்றி, பத்திரப் பதிவு செய்ய, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...