கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை திருட்டு..!

சம்பவம் தொடர்பாக மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை திருடிய சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி போஸ்டல் வீதியைச் சேர்ந்தவர் 60 வயதான மூதாட்டி முத்துலட்சுமி. இவர் பூ விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 10 நாட்களாக இவருக்கு பூ கட்டுவதற்கு உதவியாக ஒரு பெண் பணியாற்றி வந்துள்ளார். நேற்று காலையில் வழக்கம் போல அந்த பெண் மூதாட்டி வீட்டிற்கு சென்று பணி செய்து வந்தார்.

அப்போது மூதாட்டி அந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண் தண்ணீருக்கு பதிலாக ஜூஸ் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் மூதாட்டி மயக்கம் அடைந்த நிலையில், அவரிடம் இருந்து தங்க மோதிரம், கம்மல், செயின் உள்ளிட்ட மூன்று பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

மூதாட்டி மயங்கி நிலையில் கிடந்ததை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...