களைகட்டும் செஸ் ஒலிம்பியாட் போட்டி: கோவைக்கு வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி செஸ் கிராண்ட் மாஸ்டரிடம் வழங்கப்பட்டது..!

செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டு கொடிசியா வளாகத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ராமசந்திரன், முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் 4 மாவட்டங்கள் சார்பாக (கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு) அந்த ஜோதியை செஸ் கிராண்ட் மாஸ்டரிடம் அளித்தனர்.



கோவை: செஸ் ஒலிம்பியாட் ஜோதி செஸ் கிராண்ட் மாஸ்டரிடம் வழங்கப்பட்டது.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 28-ஆம் தேதி மாமல்லபுரத்தில்துவங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டு கொடிசியா வளாகத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ராமசந்திரன், முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் 4 மாவட்டங்கள் (கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு) அந்த ஜோதியை செஸ் கிராண்ட் மாஸ்டரிடம் அளித்தனர்.



இந்த ஜோதி ரேஸ்கோர்ஸ் பகுதியிலிருந்து கொடிசியா (Hall-D) அரங்கு வரை கொண்டு வரப்பட்டது. இதற்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொடிசியா அரங்கிலும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொடிசியா அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு துறைகளில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு சாதனைகள் புரிந்த வீரர் வீராங்கனைகள் கெளரவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் சிறப்புரையாற்றினர்.



அதனை தொடர்ந்து பரதம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், தற்காப்பு கலை நிகழ்ச்சிகள், மேற்கத்திய நடன நிகழ்ச்சிகள்நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து அதிவிரைவு சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. இதில் பத்து மாணவர்களுடன் கிராண்ட் மாஸ்டர் சியாம் சுந்தர் சதுரங்கம் விளையாடினார். இதில் செஸ் கேக் வெட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து16 மாவட்ட பிரதிநிதிகளிடம் மாதிரி ஜோதிகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோவைக்கு கொண்டு வர ஒலிம்பியாட் ஜோதி கிராண்ட் மாஸ்டர் சியாம் சுந்தரிடம் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மேயர் கல்பனா ஆனந்த்குமார், செஸ் கிராண்ட் மாஸ்டர் சியாம் சுந்தர், உட்பட செஸ் ஒலிம்பியாட் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வை காண்பதற்கு கோவை மாவட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள் 2000 க்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டனர்.







Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...