ஆடி கிருத்திகை.. கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காவடியுடன் குவிந்த பக்தர்கள்..!

ஆடி கிருத்திகையையொட்டி அதிகாலை முதலே கோவிலுக்கு கோவை, பொள்ளாச்சி பகுதிகள் மட்டுமின்றி, அண்டை மாவட்டமான திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் வந்த பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.


கோவை: ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி முருகனின் 7-வது படை வீடு என பக்தர்களால் கொண்டாடப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா இன்று நடந்தது.

இதனையொட்டி இன்று அதிகாலை 6 மணிக்கு கோ பூஜையுடன் விழா தொடங்கியது. 6.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்ட 16-வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு கால சந்தி பூஜை நடைபெற்றது. பின்னர் மருதமலை சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் முன் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மதியம் 12 மணிக்கு வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா வந்தார். மாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகம், 5 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி -தெய்வானை சமேதராக வீதி உலா நடக்கிறது, 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, மகா தீபாராதனை, மாலை 6 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி எழுந்தருளல், இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது.

ஆடிக் கிருத்திகையை ஒட்டி அதிகாலை முதலே கோவிலுக்கு கோவை, பொள்ளாச்சி பகுதிகள் மட்டுமின்றி, அண்டை மாவட்டமான திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மலை மற்றும் மலை அடிவாரத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலை மற்றும் அடிவாரத்திலும் பக்தர்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து கொண்டனர். கூட்டம் அதிகரித்ததை அடுத்து, அடிவாரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மேலே அனுமதித்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...