தமிழகத்தில் எந்த பிரச்சனை என்றாலும் முதல் குரலை பாஜக தான் கொடுக்கிறது எனவும், கோவையில் பாஜக வலுவாக உள்ளதாகவும், மதுபான விலை உயர்வுக்கும் மத்திய அரசு தான் காரணம் என சொல்வார்களா என கேள்வி எழுப்பிய அவர், பாஜகவினர் அந்த கடைகளுக்கு (மதுபான கடை) போக மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
கோவை: தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து கோவை மாவட்ட பாஜக சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இதில் வானதி சீனிவாசன் கண்டன உரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய அவர், திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தபோது விலைவாசி உயர்விற்குப் போராடியவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி உயர்வுக்குக் காரணமாக மாறிவிட்டனர் என தெரிவித்தார்.
மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை எனவும், பொய் பித்தலாட்டம் என்பது திமுகவினரின் DNA விலேயே உள்ளதாகவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்தை பொருத்தவரை எந்த சாலைகளிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், சாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட 200 கோடி ரூபாய் நிதி எங்கே எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், கோவையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் பராமரிப்பு பணிகள் கூட நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என தெரிவித்தார்.
மேலும், பாஜகவினர் வன்முறையை ஆதரிப்பது இல்லை எனவும், ஆனால் மக்களை வன்முறைக்குத் தள்ளும் சூழலை உருவாக்கியது திமுக அரசு என கூறினார். தமிழகத்தில் மின்சாரத்தைப் பொறுத்தவரை தற்பொழுது 100 யூனிட் இலவசத்திட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதாகவும், மின்கட்டண உயர்வு சிறுகுறு தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிப்படையும் எனவும் தெரிவித்தார்.
மேலும், திமுக அரசு விலையை உயர்த்தி விட்டு மத்திய அரசின் மேல் பழி போடுவதாகவும் குற்றம் சாட்டினார். தனித்தமிழ்நாடு வேண்டும் என்று சொல்வதற்கு திமுகவினருக்கு தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். மேலும் மத்திய அரசின் உதவி இல்லாமல் தாமாக மின்சாரத்தைத் தயாரித்துக் கொள்வார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் எந்த பிரச்சனை என்றாலும் முதல் குரலை பாஜக தான் கொடுக்கிறது எனவும், கோவையில் பாஜக வலுவாக உள்ளதாகவும் தெரிவித்தார். மதுபான விலை உயர்வுக்கும் மத்திய அரசு தான் காரணம் என சொல்வார்களா என கேள்வி எழுப்பிய அவர், பாஜகவினர் அந்த கடைகளுக்கு(மதுபான கடை) எல்லாம் போக மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

மதுபானங்களின் விலை ஏற்றத்திற்கு பாஜக காரணம் என சொன்னார்களா? என கேள்வி எழுப்பிய அவர், அவர் கூற மாட்டார்கள் எனவும் அது மாநில அரசுக்கு லாபம் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் எதன் விலை ஏறினாலும் மோடி தான் காரணம் பாஜக தான் காரணம் என திமுக பேசிய வருவதாகவும் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்த சுமார் ஆறு மாத காலத்தில் நல்ல ஆபிசர்களை வேலைக்கு போட்டு நல்லாட்சி செய்வதாக காண்பித்தார்கள் எனவும், ஆனால் தற்பொழுது கமிஷன் வாங்கி வருவதாகவும் மணல் எடுப்பதற்கு அரசு அலுவலர் கையொப்பம் இடுவதற்கு பதிலாக திமுகவினரே கையொப்பமிட்டு மணல் எடுத்து கொண்டு சென்று விடுவதாக தெரிவித்த அவர் இதுவா நேர்மையான ஆட்சி எனவும் கேள்வி எழுப்பினார்.
இதில், பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமன் பாஜக இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி உட்பட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர். இதனால் ரெட் கிராஸ் சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது.