கோவை பொள்ளாச்சி அருகே வாகன விபத்தில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக நகர துணைச் செயலாளர் உயிரிழப்பு..!

நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பொள்ளாச்சி திமுக நகர துணைச் செயலாளர் கார்த்திகேயன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே வாகன விபத்தில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக நகர துணைச் செயலாளர் உயிரிழந்தார்.

பொள்ளாச்சி கோட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(53). இவர் பொள்ளாச்சி திமுக நகர துணைச் செயலாளராக இருந்தார். கடந்த 18-ம் தேதி மாலை வேலை காரணமாக பொள்ளாச்சியிலிருந்து மீன்கரை சாலை சீனிவாசபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது விபத்து ஏற்பட்டது.

இதில், பலத்த காயமடைந்த கார்த்திகேயனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், விபத்து தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...