கோவை பொள்ளாச்சி அருகே குடிநீர் விநியோகம் தடைப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல்..!

காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்து, குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே குடிநீர் விநியோகம் தடைப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டில் குழிகள் தோண்டப்பட்டு, இதில், குழாய்கள் சேதமடைந்ததாக தெரிகிறது.

இதனால், அங்கலக்குறிச்சி கிராமத்தில் கடந்த 10-நாட்களாக குடிநீர் வினியோகம் தடைப்பட்டு உள்ளதாக கூறி, அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி ஆழியாறு ரோடு நான்கு முக்கு சுங்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற ஆழியாறு காவல் துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்து, குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...