உத்தரவை மீறினால் சம்மந்தப்பட்ட நிறுவனம், விளம்பர நிறுவனம், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள், பொது நிகழ்ச்சி மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக சுவரொட்டி வைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சியில் பொது இடங்கள், அரசு அலுவலக கட்டிடம், மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என கோவை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாநகராட்சி பகுதியில் குறிப்பாக அவினாசி மேம்பாலம், ராமநாதபுரம் மேம்பாலம் உள்ளிட்ட மேம்பாலங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களில், விளம்பரங்கள் எழுதவோ, சுவரொட்டிகள் ஓட்டுவது சட்டபடி குற்றமாகும். ஆனால், பாரபட்சமின்றி கோவையின் அனைத்து பகுதிகளிலும் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது.

"இந்த போஸ்டர்கள் ஓட்டுவதால், ஸ்மார்ட் சிட்டி என்று சொல்லப்படும் கோவை "வொர்ஸ்ட் சிட்டி" போலகாட்சியளிக்கிறது என்றால் மிகையாகாது. ஒரு போஸ்டர் மீது மற்றொரு போஸ்டர் என மேம்பாலங்கள், டெலிபோன் ஜங்ஷன் பெட்டிகள், மின் கம்பிகள், மரங்கள் என கோவையில் இங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் தான்.

அரசியல் கட்சிகள், ஊடகங்கள், விளம்பர நிறுவனங்கள், கோவையின்
மேம்பால தூங்களையும், சுவர்களையும் குத்தகைக்கு எடுத்தது போல, போஸ்டர் கலாச்சாரம் ஊரையே நாசம் செய்கிறது", என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இந்நிலையில், கோவை மாநகராட்சி பகுதிகளில் மேம்பாலங்கள், அரசு கட்டிடங்கள், சாலை தடுப்புகள், மின்கம்பங்கள் ஆகியவற்றில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவை மீறினால் சம்மந்தப்பட்ட நிறுவனம், விளம்பர நிறுவனம், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள், பொது நிகழ்ச்சி மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக சுவரொட்டி வைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும், என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநகராட்சி ஆணையரின் உத்தரவுக்கு வரவேற்பு அளித்துள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இந்த எச்சரிக்கையை கடுமையாக பயன்படுத்தி போஸ்டர் இல்லா கோவையாக மாற்றி, இனி வரும் காலங்களில் பொது இடங்கள் போஸ்டர்கள் இன்றிஇருக்க தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
