கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு, இ-சேவை மையம் வாயிலாக அனுமதி வழங்கப்படும். திருமணமாகாதவர் என்ற சான்றை சமர்ப்பித்தால் போதும்' என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோவை: கோவில்களில் திருமணம் செய்ய திருமணம் ஆகாதவர் சான்று மட்டும் போதும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு, இ-சேவை மையம் வாயிலாக அனுமதி வழங்கப்படும். திருமணமாகாதவர் என்ற சான்றை சமர்ப்பித்தால் போதும்' என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற, இதுவரை, இதர சான்றிதழ்களுடன், முதல் திருமண சான்றும் கோரப்பட்டு வந்தது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, முதல் திருமண சான்றுக்கு பதிலாக, இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும், 'திருமணமாகாதவர்' என்ற சான்றை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தி உள்ளது. எனவே, இனி வரும் காலங்களில், கோவில்களில் திருமணம் நடத்திட விரும்புபவர்கள், 'திருமணமாகாதவர்' என்ற சான்றை இ-சேவை மையங்கள் வாயிலாக பெற்று, சம்பந்தப்பட்ட கோவில்களில் சமர்ப்பித்தால் போதும்.
இதுகுறித்து, கோயில் அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. உரிய சான்றிதழை தவிர, இதர சான்றிதழ்களை கோரினால், அறநிலையத் துறை தலைமை அலுவலகத்திற்கு, 044-28339999 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.