கோவை 'சிட்கோ' தொழிற்பேட்டையில் 3,000-தொழிலாளர்களுக்கு 'கோவிட்-19' பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்..!

கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் 'COSIEMA' சார்பில், தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் 3,000-தொழிலாளர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.



கோவை: கோவை 'சிட்கோ தொழிற்பேட்டையில் 3,000-தொழிலாளர்களுக்கு 'கோவிட்-19' பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்ட நிர்வாகம், மாவட்ட பொது சுகாதாரத்துறை, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் 'சிட்கோ',மாவட்ட தொழில் மையம் மற்றும் 'COSIEMA' சங்கம் சார்பில் நடந்த முகாமை 'சிட்கோ' கிளை மேலாளர் ஷர்மிளா, மாவட்ட தொழில் மைய மேலாளர் திருமுருகன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

'COSIEMA' தலைவர் நல்லதம்பி,செயலாளர் லோகநாதன், தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்கம் 'TANSTIA' துணைத் தலைவர் சுருளிவேல் உள்ளிட்டோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 3,000 தொழிலாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் நாளில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

எதிர்வரும் நாட்களில் நடக்கும் சிறப்பு முகாமில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...