'நம்ம செஸ்.. நம்ம பெருமை'.. கோவையில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்..!

செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்க உள்ளதை ஒட்டி கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அப்பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கோவை: கோவையில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



44-வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் செஸ் ஒலிம்பியாட் ஸ்டிக்கரை பேருந்தின் முன்புறம் ஒட்டினார்.



அப்பேருந்துகளில் ஒரு புறம் தமிழில் "நம்ம சென்னை, நம்ம செஸ் என்றும் நம்ம செஸ் நம்ம பெருமை என்ற வாசகமும் மாமல்லபுர கோவிலும் மற்றொரு பக்கம் ஆங்கிலத்தில் "NAMMA CHESS NAMMA PRIDE" என்ற வாசகமும் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையும் இரு பக்கங்களிலும் முதல்வரின் புகைப்படம் செஸ் ஒலிம்பியாட் 2022 லோகோவும் அச்சிடப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 20 தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் இது போன்று ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளது அதில் இரண்டு பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் என்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.





Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...