விபத்துக்குள்ளான எல்.ஜி.பி. 1300 ரக கார்கள் சர்வதேச நிபந்தனைக்குட்பட்டு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. மேலும், விபத்தில் சிக்குவது இயல்பான ஒன்று, ஆனால் இந்த கார் விபத்தில் இந்தியாவிலேயே யாரும் உயிரிழந்தது இல்லை.
கோவை: கோவையில் ரேஸ் கார் பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய 16-வயது சிறுவன் பலியான சம்பவம் அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்தவர் கிரிஸ்நெந்த் சட்டர்ஜி (48). இவர் ஹரியான மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆராதனா தண்ட் சட்டர்ஜி, இவர்களுக்கு திருமணமாகி நனம் சட்டர்ஜி (16). இவர் ஹரியானா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
மேலும், சிறுவன் நமன் சட்டர்ஜிக்கு கார் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வம் இருந்ததால், அங்குள்ள தனியார் கார் ரேஸ் பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற்று வந்தார். முதல் கட்ட பயிற்சிகள் நிறைவடைந்து இரண்டாம் கட்டப்பயிற்சிக்காக கடந்த ஜூன் 29 ஆம் தாய் ஆராதனா மற்றும் நமன் சட்டர்ஜி இருவரும் அந்த பயிற்சி மையத்தினருடன் கோவை வந்துள்ளனர்.
பின்னர் ஜூலை 1 ஆம் தேதி கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரிமோட்டார்ஸ் ஸ்பீடு வே ஓடுதளத்தில் காலை பயிற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது நமன் சட்டர்ஜி பயிற்சியில் இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த எல்.ஜி.பி 1300 கார் ஓடுதளத்தை விட்டு விலகி ஓரத்தில் இருந்த இரும்பு தடுப்பு மீது பயங்கரமாக மோதியத.
இதில் தலை, இடுப்பு பகுதிகளில் படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நமன் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குள்ளான எல்.ஜி.பி. 1300 ரக கார்கள் சர்வதேசநிபந்தனைக்குட்பட்டு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. மேலும் விபத்தில் சிக்குவது இயல்பான ஒன்று, ஆனால் இந்த கார் விபத்தில் இந்தியாவிலேயே யாரும் உயிரிழந்தது இல்லை. இந்நிலையில் பயிற்சியின் 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.