'கோவை புத்தகத் திருவிழா' குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு..!

கோவையில் ஆறாவது புத்தக திருவிழா ஜூலை 22-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 10-நாட்கள் நடைபெற உள்ளதாகவும், கொரோனா தொற்றுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.



கோவை: கோவையில் வருகிற 22-ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன், கோவையில் ஆறாவது புத்தகத் திருவிழா ஜூலை 22 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் கொரோனா தொற்றுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.



கோவை கொடிசியா மற்றும் தென்னிந்திய பதிப்பாளர் சங்கம் இணைந்து இந்த புத்தகத் திருவிழாவை நடத்துவதாக தெரிவித்தார். இவ்விழாவில் 300-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஒரு லட்ச மாணவ மாணவிகளை இந்நிகழ்வில் கலந்து கொள்ள அழைத்து வர முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

28-ஆம் தேதி 5000-மாணவர்கள் ஒரே இடத்தில் திருக்குறளை வாசிக்கும் நிகழ்வு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதேபோல் அனைத்து நாட்களிலும் மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வருடம் 3-இளம் படைப்பாளர்களுக்கு (நிழலி, சுரேஷ் பிரதீப், வடிவரசு) விருதுகள் வழங்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும், வாழ்நாள் சாதனையாளர் விருது வரலாற்று அறிஞர் குடவாயில் சுப்பிரமணியத்திற்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ரோட்டரி கிளப் மூலம் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு கூப்பன்கள் வழங்கி இலவசமாக புத்தகங்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்காக அரசு பேருந்துகளை அப்பகுதியில் இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்விற்கு அனுமதி இலவசம் எனவும், கிட்டத்தட்ட இரண்டு லட்சம் புதிய புத்தகங்கள் இதில் இடம்பெறும் எனவும், கொரோனா கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுத்தான் அனைத்தும் நடைபெறும் என தெரிவித்தார்.



இதில் பேசிய கொடிசியா புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த், இந்நிகழ்வில் இளம் படைப்பாளிகளுக்கான விருது மூன்று பேருக்கும் 25,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் ரோட்டரி சார்பில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில், 3500 கட்டுரைகள் வந்துள்ளதாகவும் அதில் ஆயிரம் பேரை தேர்வு செய்து அவர்களுக்கு 200 மதிப்புள்ள கூப்பன் மற்றும் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.



அதேபோல் அப்துல் கலாமின் நினைவு தினத்தை ஒட்டி அப்துல்கலாமின் சீடர் தாமு பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 30ஆம் தேதி தொழிலாளர்களுக்கு மட்டுமான நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.



Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...