கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் - கோவையில் இயக்கப்படாத தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும்- மாவட்ட ஆட்சியர்..!

பள்ளி கல்வித்துறை மூலம் இன்று இயக்கப்படாத பள்ளிகளிடத்தில் விளக்கம் கேட்கப்படும், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவை பள்ளி கல்வித்துறை மேற்கொள்ளும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கோவையில் இயக்கப்படாத தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் போராட்டமாக மாறியுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்பள்ளியின் வாகனத்தையும் பள்ளி பொருட்களையும் சேதப்படுத்தினர்.

இந்நிலையில், தனியார் பள்ளி கூட்டமைப்பு இன்று முதல் தனியார் பள்ளிகள் இயக்கப்படாது என அறிவித்தது. இந்நிலையில் அனுமதியின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது என மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் இயக்கப்பட்ட நிலையில் ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டது. கோவை மாவட்டத்தில் 15 தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.



இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கருத்து கேட்ட போது பள்ளி கல்வித்துறை மூலம் இன்று இயக்கப்படாத பள்ளிகளிடத்தில் விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்தார். மேலும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவை பள்ளி கல்வித்துறை மேற்கொள்ளும் என கூறினார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...