தமிழகம் முழுவதும் மத்திய அரசின் 8-ஆண்டு கால ஆட்சி குறித்தும், பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கியும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் பல்லடத்தில் "தாமரை மாநாடு" என்ற பெயரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர், பல்லடம் கரையான்புதூரில் பாஜக சார்பில் மத்திய அரசின் 8-ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மத்திய அரசின் 8-ஆண்டு கால ஆட்சி குறித்தும், பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கியும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் இரவு பல்லடத்தில் "தாமரை மாநாடு" என்ற பெயரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில்,திருப்பூர் மாவட்டத்தில் உலக தரம் வாய்ந்த மருத்துவ கல்லூரி அமைக்க பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டு இந்த ஆண்டு 96 மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
கடுமையான பஞ்சு விலை ஏற்றத்தால் நூல் விலை உயர்வை குறைக்கும் பொருட்டு, நூல் இறக்குமதிக்கு வரியை ரத்து செய்தது விளைவாக நூல் விலை கிலோவிற்கு ரூபாய் 40 குறைந்துள்ளது உள்ளிட்ட மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகள் குறித்து விளக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகையில், மத்திய அரசின் சாதனையாக தற்போது வரை 200-கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் 15-லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது என கூறினார். கடந்த 67-ஆண்டுகளில் 5-கோடியே 50-லட்சம் கழிப்பிடங்களை தான் கட்டினார்கள். ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 8-ஆண்டுகளில் 11-கோடி கழிப்பிடங்களை கட்டியுள்ளோம் என்றார்.
திருப்பூரில் 2024-ஆம் ஆண்டிற்கு முன்பாக இ.எஸ்.ஐ மருத்துவமனை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார். கறிக்கோழி பிரச்சனையில் கோழி வளர்ப்பவர்கள், முகவர்கள் இடையே தமிழக அரசு 15-நாட்களில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் பா.ஜ.க களத்தில் இறங்கி கோட்டையை நோக்கி வரவும் தயங்காது என்றார்.
பல்வேறு நாடுகள் கலந்து கொள்ள உள்ள செஸ் ஒலிம்பியாட்டைதமிழகத்திற்குக் கொண்டு வந்தது பிரதமர் மோடி. ஆனால் அதன் விளம்பர படத்தில் நடித்து கொண்டு மாப்பிள்ளை அவர் தான் ஆனால் சட்டை என்னோடது போல முதல்வர் செய்கிறார் என்று விமர்சனம் செய்தார்.
நமது நாட்டில் முத்ரா கடன் திட்டம் 6 ஆண்டுகளில்தமிழகத்திற்கு அதிகமாக கிடைத்துள்ளது. அதில், 75 சதவீதம் திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் 8 ஆண்டு காலமாக பிரதமர் சிறப்பாக வளர்த்து வருகிறார். சிறு,குறு தொழிலாளர்களை உயர்த்த பிரதமர் பாடுபடுகிறார்.
மேலும், நமது நாட்டில் கடந்த 8-ஆண்டுகள் எங்கேயும் குண்டு வெடிக்கவில்லை. அந்த அளவிற்கு பாதுகாப்பான நாடாக இந்தியா உருவாகியுள்ளது. நமது நாட்டில் சண்டிகர், பூனே போன்ற சின்ன மாவட்டங்கள் கூட பெரிதாக வளர்ந்து விட்டது. நமது தமிழகத்தை மேலும், வளர்க்க வேண்டும் என பிரதமர் மோடி கடுமையாக போராடி வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை துறையில் கடந்த காலத்தில் 50 ஆயிரம் கோடி வர்ததகம் செய்தது. தற்போது 5 லட்சம் கோடி வர்ததகம் செய்கிறது. ஐரோப்பிய நாடு, இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளிடம் வரி இல்லாத வர்த்தகம் ஒப்பந்தமாகி வேலை நடந்து வருகிறது. அதன் மூலம் இந்தியா மற்ற நாடுகளை விட பெரும் வளர்ச்சி அடையும்.
சைனா வை விட நாம் வளர கடுமையாக உழைக்க வேண்டும். விவசாயத்தை இரட்டிப்பு செய்வதாக பிரதமர் கூறியுள்ளார் . இயற்கை விவசாயம் கொண்டு வரப்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசனத்தில் 85 சதவீதம் மானியம், வருடத்திற்கு 6 ஆயிரம் எனவிவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை செய்து வருகிறார் மோடி.
மேலும், மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பாஜகவில் இணைந்து கொண்டனர்.இதில் மாநில பொதுச்செயலாளர்முருகானந்தம், மாநில செயலாளர் மலர்கொடி,திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் வேல், மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன்,ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பெண்கள், ஆண்கள் என பல்லாயிரக்கணக்கானோர்கலந்து கொண்டனர்.