குற்றங்களை தடுக்க கோவை குடியிருப்புகளில் வீதி நூலகம் அமைக்க மாநகர போலீசார் முயற்சி..!

இளம் வயதினர் மத்தியில் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்தவும், குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்புகளில் வீதி நூலகம் அமைக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.


கோவை: குற்றங்களை தடுக்க கோவை குடியிருப்புகளில் வீதி நூலகம் அமைக்க மாநகர போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இளம் வயதினர் மத்தியில் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்தவும், குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்புகளில் வீதி நூலகம் அமைக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், தினமும் ஒரு குடியிருப்பு பகுதியில் நடை ரோந்து சென்று பொதுமக்களிடம் கலந்துரையாடி வருகிறார். ரத்தினபுரி, கண்ணப்ப நகர் பகுதியில் சுற்றித் திரியும் 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், கோஷ்டிகளாக பிரிந்து மோதிக் கொள்வது வாடிக்கை என்றும், மது, கஞ்சாவுக்கு அடிமையாகி வருகின்றனர் என்றும், பொதுமக்கள் சார்பில் கமிஷனரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதே போன்ற பிரச்சினை வெவ்வேறு குடியிருப்புகளிலும் இருப்பது தெரியவந்தது. இதற்கு தீர்வாக, குடியிருப்புகளில் வீதி நூலகம் அமைக்க கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதற்கென ரத்தினபுரி, கண்ணப்ப நகர், ஏரிமேடு, அம்மன் குளம், புலியகுளம், பிள்ளையார்புரம், செல்வபுரம் உள்ளிட்ட 77 குடிசைப்பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. தொகுப்பு வீடுகளை கொண்ட 94 குடியிருப்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நூலகங்களில் காமிக்ஸ் புத்தகங்கள், நீதி போதனை கதைகள், அறிவை வளர்க்கும் பயனுள்ள புத்தகங்கள் இருக்கும். பள்ளிக்குழந்தைகளும், வாலிபர்களும் இந்த நூலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், இளைஞர்கள் மத்தியில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை நல்வழிப்படுத்தவும், தவறான செயல்பாடுகளை நோக்கி கவனத்தை திருப்பாமல் இருக்கவும், இந்த நுாலகங்கள் உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு குடியிருப்பிலும் ஸ்பான்சர்களின் உதவியுடன், இந்த நூலகம் அமைக்கப்படும். இதற்கு ஸ்பான்சர் செய்ய விரும்புவோர் நேரடியாக அலுவலகத்தில் என்னை அணுகலாம், என்றார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...