கோவையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட ஆயுதப்படை காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

கோவை அரசு பொருட்காட்சி வளாகத்தில் பாதுகாப்பு பணியின் போது, துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படை காவலர் காளிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட ஆயுதப்படை காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (23). கோவை ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கோவை ஜெயில் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சி மைதானத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அங்கு சென்று பார்த்த போது காளிமுத்து வயிற்றில் குண்டு பாய்ந்து இரத்தத்துடன் வெளியே வந்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்த அரசு ஊழியர்கள் காளிமுத்துவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து கோவை மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தடயவியல் துறை அதிகாரிகள் தடயங்களை சேகரித்தனர். முதல் கட்ட விசாரணையில் காளிமுத்து தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த ஆயுதப்படை காவலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...