உள்நாட்டு ஜவுளி தேவை ஜவுளி உற்பத்தித் துறைக்கு கை கொடுக்கும் - இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு..!

ஒட்டுமொத்த ஜவுளித் தொழில் துறையும், சந்தை நிலவரங்கள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டு இந்த சூழலை எதிர்கொள்ள வேண்டும். விரைவில் பொருட்களின் தேவை அதிகரித்து, ஜவுளித்துறை மீண்டும் இயல்பு பாதைக்கு திரும்பும் என ITF- கன்வீனர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கடந்த 3 மாதங்களாக, இந்திய ஜவுளி உற்பத்தித் துறை நிச்சயமற்ற தன்மையையும், குறைந்த அளவிலான டிமாண்ட் போன்ற சவால்களையும் சந்தித்து வருகிறது.

இதுகுறித்து, இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ITF) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:-

எங்கள் ஆய்வின் படி இந்த நிலை விரைவில் மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவின் உள்நாட்டு ஜவுளி நுகர்வு வரும் மாதங்களில் அதிகரிக்கும் வாய்ப்பும், ஏற்றுமதி வாய்ப்புகள் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உறுதியாக உள்ளது. இந்த மாற்றத்துக்கான வாய்ப்புகள் காரணங்களையும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

இந்திய ஜவுளி ரீடெய்ல் வர்த்தகத்தில், சரக்கு கையிருப்பு குறைவாக வைத்து விற்பனை கையாளப்படுவதால், வரும் பண்டிகை கால விற்பனையை எதிர்பார்த்து, நூல் மற்றும் துணிகளுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால், வர்த்தகம் மீண்டும் ஜூலை இறுதியிலிருந்து சூடுபிடிக்கும்.

மூலப்பொருளின் விலை குறைந்து கொண்டு வருவதால் இரண்டு மாதங்களாக அனைத்து வர்த்தக நிலைகளிலும், கையிருப்பு குறைந்து விட்டது. தற்பொழுது வியாபாரத்தை தொடர, மீண்டும் நூல் மற்றும் துணிகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எங்களுக்குக் கிடைத்த தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் ஜவுளி பொருட்களின் விற்பனை ரீடெய்ல் அளவில்நன்றாக உள்ளது. கடந்த காலங்களில், மூலப்பொருள் விலை குறைந்து நிலையானவுடன், ஜவுளிப் பொருட்களுக்கு நல்ல டிமாண்ட்வந்ததை பார்த்திருக்கிறோம். ஜூலை மாத இறுதியில் இருந்து டிமாண்ட் அதிகரிக்கும் சூழல் உள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக நூற்பாலைகள் உட்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், 30 முதல் 40 சதவீத உற்பத்தியை குறைத்து இயங்குவதால், நூல் மற்றும் துணிகள் சப்ளை வெகுவாக குறைந்து உள்ளது. இந்த நிலை புதிதாக டிமாண்ட் வரும்பொழுது சாதகமாக மாறும்.

இந்தியாவின்உள்நாட்டு ஜவுளி வர்த்தகத்தின் மதிப்பு 6.5 லட்சம் கோடியாக உள்ளது. நமது GDP வளர்ச்சியோடு ஒட்டி 5 முதல் 7 சதவீதம் இந்த வருடமும் பணவீக்க சூழ்நிலையையும் தாண்டி இந்திய ஜவுளி உபயோகம் 7 லட்சம் கோடியாக உயரும்.

வெளிநாட்டு சந்தைகளில், உள்ள நிறுவனங்களிலிருந்து அடுத்த கால் ஆண்டிலிருந்து வியாபாரம் வழக்கம் போல் இருக்கும் என்ற தகவல்கள் வந்துள்ளன. அமெரிக்க சந்தையைஎடுத்துக்கொண்டால், மே மாதத்தில் ஆயத்த ஆடை இறக்குமதிRs66000 கோடி ரூபாயாக உள்ளது.

இது கடந்த மூன்று மாதத்தின்சராசரியை விட 5 % அதிகமாகும். மேலும் சரக்கு போக்குவரத்துக்கான கட்டணம் மற்றும் மூலப் பொருட்களின் விலை குறைவால், ஏற்றுமதி வர்த்தகம் விரைவில் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஜவுளி பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யும் சீனா, தொடர் பின்னடைவுகளை சந்தித்து வருவதால், வெளிநாட்டு வர்த்தகர்கள் இந்தியாவில் வர்த்தக விரிவாக்கத்தை தீவிரப்படுத்த துவங்கியுள்ளனர்.

ஆகவே பணவீக்கம், வெளிநாட்டு ரீடெய்ல் துறையில் அதிக சரக்கு கையிருப்பு, மூலப்பொருட்கள் விலை குறையும் நிலை, அரசுகள் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், போன்ற தொடர்ச்சியான நிகழ்வுகளால் தற்போது ஜவுளி உற்பத்தித் துறையில் அனைத்து நிலைகளிலும் தொய்வு ஏற்பட்டு இருந்தாலும், இந்த நிலையைக் கடந்து மாற்றம் விரைவில் வருவதற்கான காரணங்கள் தற்போது வலுவடைந்துள்ளது.

ஆகவே, ஒட்டுமொத்த ஜவுளித் தொழில் துறையும், சந்தை நிலவரங்கள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டு இந்த சூழலை எதிர்கொள்ள வேண்டும். விரைவில் பொருட்களின் தேவை அதிகரித்து, ஜவுளித்துறை மீண்டும் இயல்புப்பாதைக்கு திரும்பும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...