மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல் திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் சிறப்பாக பங்களித்த மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கோவை: கோவை பொள்ளாச்சி நகராட்சியில், "என் குப்பை என் பொறுப்பு" திட்டத்தின் கீழ் நடைபெற்ற பல்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி நகராட்சி தூய்மை இயக்கம் சார்பில், "என் குப்பை என் பொறுப்பு" என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டம் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த ஒரு வாரமாக பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நேதாஜி ரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல் திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளில், சிறப்பாக பங்களித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகர்மன்றத் துணைத் தலைவர் கௌதமன், நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது பல் திறன் போட்டிகளில் சிறப்பாக பங்களித்த மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.