ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை நிறைவேற்றி விட்டு பிறகு மற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும், ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று மாவட்ட தலைவர் வசந்தராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம்பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டு ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும், விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கேரளாவில் இடைமலையாறு அணை கட்டிய பிறகு தமிழகத்தில் ஆனைமலையாறு நல்லாறு திட்டம் செயல்படுத்தலாம் என்று இரு மாநில ஒப்பந்தங்கள் இருந்தும் கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டத்தை நிறைவேற்ற பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக தேர்தல் அறிக்கையில் ஆனைமலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த தமிழக முதல்வர், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இப்பகுதியில் நீர் ஆதாரத்தைப் பெருக்காமல் ஆழியாறிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த இருபது ஆண்டுகளாக ஐந்து முறை தண்ணீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்டு பல லட்சம் தென்னை மரங்கள் காய்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றி விட்டு பிறகு மற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும், ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று மாவட்ட தலைவர் வசந்தராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.