அண்மையில் திறக்கப்பட்ட கோவை திருச்சி சாலை ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில், இரு சக்கர வாகன விபத்தில் ஏற்கனவே இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: அண்மையில் திறக்கப்பட்டகோவை திருச்சி சாலை ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில், சற்று முன் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை இயக்கி இதுவரை இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டி உயிரிழந்த சம்பவம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காநல்லூர் நோக்கிச் சென்ற அந்தசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இதில் ஆனந்தகுமார் (சுமார் 42) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.