அவிலா மேல்நிலை பள்ளி பொன் விழா ஆண்டை முன்னிட்டு இந்தியாவிலேயே பள்ளியில் முதன் முறையாக கல்வி பயன்பாட்டிற்கான மனித வடிவிலான இயந்திரமனிதன்


1967ம் ஆண்டு கோவையில் துவங்கப்பட்ட அவிலா பள்ளியின் பொன் விழா வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவிலா பள்ளியின் நிர்வாகத்தினர் கூறும்போது, கிணத்துக்கடவு பகுதியில் வீடு இல்லாத ஏழை பொதுமக்கள் 12 பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 1400-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 7 பேருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கபட்டு அவர்களது மருத்துவ செலவை நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.

மேலும், மாற்றுத் திறனாளிகளின் மருத்துவ செலவு மற்றும் திருமண உதவித் தொகையாக 5 லட்சமும் கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்வாதாரம் மேம்படுத்த 15 லட்ச ரூபாய் வரை செலவிடப்பட்டு பள்ளி கல்வி சேவையை கடந்து பொதுமக்களுக்கு ஏராளமான சேவைகள் செய்து வருவதாக கூறினர். 

மேலும், இந்த பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியாவிலேயே பள்ளியில் முதன் முறையாக மனித வடிவிலான இயந்திர மனிதன் கல்வி பயன்பாட்டிற்கு உபயோக்க உள்ளதாகவும் 28ம் தேதி அன்று பள்ளியில் இதன் செயல் முறை விளக்கம் அளிக்கபட உள்ளதாக கூறினர்.

விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி குரியன் ஜோசப், உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பள்ளி கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், கோவை மாநகர ராமநாதபுரம் பகுதி மறைமாவட்டதின் ஆயர் பால் அலபாட், ஏடிஜிபி சைலேந்திரபாபு, மாநகர ஆணையர் அமல்ராஜ் உள்ளிடோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...