கோவை தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் I LOVE TCE நினைவு சின்னம் திறப்பு விழா கொண்டாட்டம்..!

தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் 2018-22 பருவகாலத்தில் பயின்ற மாணாக்கர்கள் கல்லூரி வளாகத்தில் “I LOVE TCE” என்ற நினைவு சின்னத்தை உருவாக்கியுள்ளார்கள்.


கோவை:தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் மாணாக்கர்கள் கல்லூரி வளாகத்தில் I LOVE TCE நினைவு சின்னத்தை உருவாக்கியுள்ளார்கள்.

தமிழ்நாடு பொறியியல் கல்லூரி 1984-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதன் முதலாக தொடங்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரியில் 7-இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளும்,3-முதுநிலை பொறியியல் பாடப்பிரிவுகளும் நடைபெற்று வருகிறது.

இதில், கட்டிடவியல் துறை 38-ஆண்டுகளாக சீரும் சிறப்புமாக செயல்பட்டு வருகிறது.கல்லூரியின்மீது கொண்ட பற்றால், கல்லூரியின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் 2018-22பருவகாலத்தில் பயின்ற இத்துறை மாணாக்கர்கள் கல்லூரி வளாகத்தில்“I LOVE TCE” என்ற நினைவு சின்னத்தை உருவாக்கியுள்ளார்கள்.

இந்தநினைவுச்சின்னத்தைகருமத்தம்பட்டிநகராட்சிதலைவர் நித்யா.க.மனோகரன்,நகராட்சிதுணைதலைவர் யுவராஜ், கல்லூரி தலைவர் முனைவர் P.V. ரவி, கல்லூரி முதன்மை செயல் அதிகாரி முனைவர் Dr.அனுஷா ரவி, கல்லூரி முதல்வர் முனைவர்.மா.கார்த்திகேயன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.



கல்லூரிநிர்வாகத்தினர்சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தனர். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்புரை மற்றும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

திறம்பட செயல்பட்ட மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் நினைவு பரிசுகள்வழங்கி கௌரவிக்கப்பட்டது . கட்டிடவியல் துறைதலைவர் முனைவர்ம. சீத்தாபதி இந்த விழாவினை சிறப்பித்த அத்துணைநல் உள்ளங்களுக்கும் நன்றி பாராட்டினார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...