கோவை சவுரிபாளையம் தனியார் பள்ளியில் TC- வழங்க ஆவணம் செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

கொரோனா காலத்தினால் சரி வர பள்ளி கட்டணம் 70-ஆயிரத்தை செலுத்த இயலாததால், பள்ளி நிர்வாகம் டிசியை தர மறுப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் பள்ளி நிர்வாகத்திடம் டிசி யை அளிக்க ஆவணம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை மனு அளித்தார்.


கோவை: கோவை சவுரிபாளையம் தனியார் பள்ளியில்TC- வழங்க ஆவணம் செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு அளித்துள்ளனர்.

கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிங்கார வேலன். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகன் சவுரி பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் (அன்னை வேளாங்கண்ணி பள்ளி) 12-ம் வகுப்பு முடித்துள்ளார்.

இதனை அடுத்து, அரசு கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க, டிசி தேவைப்படுகிறது. ஆனால் இவர் பள்ளி கட்டணம் 70-ஆயிரத்தை செலுத்ததால் முழு பணத்தையும் செலுத்தினால் தான் டிசி தருவோம் என பள்ளி நிர்வாகத்தினர் கூறுவதாகவும், கொரோனா காலத்தினால் சரி வர பள்ளி கட்டணத்தை செலுத்த இயலாததால் தற்பொழுது தன்னால் இயன்றவரை பள்ளி கட்டணத்தைச் செலுத்தி விடுவதாகவும், மகனின் டிசி யை அளித்தால் கல்லூரியில் சேர்ந்து விடுவான் என பல முறை கூறியும் பள்ளி நிர்வாகம் டிசியை தர மறுப்பதால் மாவட்ட ஆட்சியர் பள்ளி நிர்வாகத்திடம் டிசி யை அளிக்க ஆவணம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை மனு அளித்தார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...