முதல்வருக்கு கொரோனா தொற்று: கோவை வருகை ஒத்திவைப்பு..!

ஜூலை 15 ஆம் தேதி முதல்வர் பங்கேற்க இருந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தி.மு.க. சார்பிலான பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜூலை 15-ந் தேதி ஆம் தேதி கோவை கொடிசியாவில் நடைபெறும் வேளாண் கண்காட்சியை பார்வையிடுவதுடன், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, அவர் நாளை (ஜூலை 14) மாலை கோவை வருவதாக இருந்தது.

நேற்று முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் வருகையையொட்டி,பொள்ளாச்சியில் தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த பொதுக் கூட்டத்திலும் பங்கேற்பதாக இருந்தது. இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மும்முரமாக செய்து வந்தனர்.

பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிக்கு, கால்கோள் நடப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உடல் சோர்வு, காய்ச்சல் அறிகுறி இருந்ததை அடுத்து,நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரது கோவை வருகை மற்றும் கோவையில் பங்கேற்க இருந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தி.மு.க. சார்பிலான பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குணமடைந்த பிறகு, முதல்வரின் கோவை நிகழ்ச்சிகள் குறித்த தேதி அறிவிக்கப்படும் என தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது குறித்து தி.மு.க நிர்வாகிகள் கூறுகையில், முதல்-அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் 14, 15-ல் அவர் கோவையில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும், என்றனர்

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...