குடியிருப்பு பகுதியில் 'கழிவுநீர் ஓடை' நோய் தொற்று பரவும் அபாயம்: தீர்வுகாண கோவை ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு..!

கோவை 25-வது வார்டு காந்திமா நகர் காவல் நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் பெரிய கழிவு நீர் ஓடை செல்வதை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் ஓடை செல்வதை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை 25-வது வார்டு காந்திமா நகர் காவல் நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் பெரிய கழிவு நீர் ஓடை செல்வதை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுகுறித்து நகர அமைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி பால மணிகண்டன் கூறுகையில், அப்பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வரும் கழிவு நீர் ஓடையில் கலப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும், திடக்கழிவுகளால் ஓடை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாகவும், இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் முதல்வர் செல்லுக்கு புகார் அளித்தும் சிங்காநல்லூர் பாதாள சாக்கடை பணிகள் முடிந்ததும், இதனை அத்துடன் இணைத்து விடுவோம் என பதில் அளிப்பதாகக் கூறிய அவர் தற்காலிக நடவடிக்கையாவது எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...