அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை ஜி.எம் நகர் பகுதியில் வாழ் மக்கள், உலக மக்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக, சகோதரத்துவத்தை பேணி ஒற்றுமையோடு வாழ வேண்டும் என சிறப்பு தொழுகையில் வழிபாடு நடத்தினார்கள்.
கோவை: தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையான இன்று, ஏழை எளியவர்களுடன் உணவை பகிரிந்தும், சிறப்புதொழுகையில் பங்கேற்றும், கோவையில் உள்ள இஸ்லாமியர்கள் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விளங்கும் பக்ரித் பெருநாள் பண்டிகையையொட்டி, ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் பள்ளிவாசல்களில் பக்ரித் பெருநாள் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.

தொழுகை முடிந்துக் கொண்டு அனைவரும் ஒருவருக்கொருவர் தழுவிக் கொண்டு பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி அன்பை வெளிப்படுத்தினர்.
அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை ஜி.எம் நகர் பகுதியில் வாழ் மக்கள், உலக மக்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும், மக்கள் அனைவரும் சகோதரத்துவத்தை கடைபிடித்து வாழ வேண்டும், மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என சிறப்பு தொழுகையில் வழிபாடு நடத்தினார்கள்.

தொடர்ந்து, ஆடு, மாடு போன்றவற்றை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், ஒரு பங்கை தங்களுக்கும் என பிரித்து கொடுத்து மகிழ்ச்சியுடன் தியாக திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.