பல மாவட்டங்களில் 100-சதவீதம் மழை: வேளாண் பல்கலை காலநிலை ஆய்வு மையம் தகவல்..!

கடந்த, 38-நாட்களில் பல மாவட்டங்களில், 100-சதவீதத்துக்கும் அதிகமாக தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதாக வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


கோவை: தென்மேற்கு பருவமழை பல மாவட்டங்களில், 100-சதவீதத்திற்கு மேல் பொழிந்து உள்ளதாக, வேளாண் காலநிலை ஆய்வு மைய தலைவர் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த, 38-நாட்களில் பல மாவட்டங்களில், 100-சதவீதத்துக்கும் அதிகமாக பெய்துள்ளதாகவும், ஒரு சில மாவட்டங்களில் மழைப்பொழிவு பொய்த்துள்ளதாகவும், வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வேளாண் பல்கலை காலநிலை ஆய்வு மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:-

கடந்த ஜூன் 1 முதல், நேற்று வரை, கன்னியாகுமரி, நாகை, காரைக்கால், தென்காசி, நெல்லை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைப்பொழிவு மிகவும் குறைவாகப் பதிவாகியுள்ளது. கரூர், திருச்சி, பெரம்பலூர், சென்னை, திருப்பூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, விருதுநகர், தேனி, திருவள்ளூர், சிவகங்கை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில், 100-சதவீதத்துக்கும் அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக, 270-சதவீதம் அளவுக்கு பதிவாகியுள்ளது.

ஜூலை 15-க்கு பின், பருவமழை தீவிரமடையும். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த ஜூன் மாதத்தில், 9-மி.மீ., வரை மழைப்பொழிவு பதிவானது. அதன்பின், ஒட்டுமொத்தமாக, 30-மி.மீ., வரை கிடைத்துள்ளது. தென்மேற்கு பருவமழையால், கோவை மாவட்டத்தில், 210-மி.மீ., வரை மழை கிடைக்கும். வரும் மாதங்களில், 180-மி.மீ., வரை கிடைக்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் எதிர்பார்த்த மழைப்பொழிவு கிடைக்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...