நீலகிரியில் தொடர் மழையால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..!

மாவட்டத்தில் தொடரும் மழையால், பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. 6 தாலுகாக்களில், 42 மண்டல குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். பாதிப்பு இருந்தால் வருவாய் துறையை அணுகி, நிவாரண முகாமில் தங்கலாம் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.


நீலகிரி: நீலகிரியில் காற்றின் வேகம் அதிகரித்து இரவில் கனமழை தொடர்வதால், பல இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது.

நீலகிரியில் நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக அவலாஞ்சியில் 13.3 செ.மீ., அப்பர்பவானியில் 7.1 செ.மீ., மழை பதிவானது. ஊட்டி நகர் பகுதிகளில் காற்றின் வேகம் குறைவாக இருந்தாலும், புறநகர் பகுதிகளில் அதிகரித்திருந்தது.

அப்பர்பவானி - மஞ்சூர் இடையே கோரகுந்தாவில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தை அகற்றினர். அப்பர்பவானி, அவலாஞ்சி சுற்றுப்புற நீர்ப்பிடிப்பு பகுதிகளில், ஆறு மாதங்களுக்குப் பின், தண்ணீர் அதிகரித்து வருகிறது.

பந்தலூர் பகுதியில் மேக மூட்டத்தால் வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பொன்னானி, சோலாடி ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குன்னூர் பேரக்ஸ் செல்லும் சாலையில், பந்துமை அருகே, ராட்சத கற்பூர மரத்தின் கிளை சாலையில் விழுந்தது.

அவ்வழியாக வந்த இளைஞர்கள், நெடுஞ்சாலை துறையினர் மரத்தை அகற்றினர். மாவட்ட ஆட்சியர் அம்ரித் கூறுகையில், "மாவட்டத்தில் தொடரும் மழையால், பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. 6 தாலுகாக்களில், 42 மண்டல குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். பாதிப்பு இருந்தால் வருவாய் துறையை அணுகி, நிவாரண முகாமில் தங்கலாம்," என்றார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...