சிறுவாணி அணை பகுதியில், 66-மி.மீ., மழை பெய்திருக்கிறது. இதனால் சிற்றருவிகளில் நீர் வரத்து காணப்படுவதால், நீர்மட்டம் 18-அடியாக அதிகரித்திருக்கிறது.
கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில், தென்மேற்கு பருவ மழை வலுவாக பெய்ய ஆரம்பித்திருக்கிறது. சிறுவாணி அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணையில், 66 மி.மீ., அடிவாரத்தில் 39 மி.மீ., பெய்திருக்கிறது. குடிநீர் தேவைக்காக, 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. முத்திக்குளம், பாம்பாறு, பட்டியாறு உள்ளிட்ட சிற்றருவிகளிலிருந்து நீர்வரத்து காணப்படுகிறது.
அதனால், ஒரே நாளில், நீர் மட்டம் இரண்டே கால் அடி உயர்ந்து, 18 அடியாக இருந்தது. அடிவார பகுதியில் பெய்த மழையாலும், மலை முகடுகளில் வழிந்தோடும் நீர் கீழ் நோக்கி வருவதாலும், கோவை குற்றாலத்துக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்திருக்கிறது.
சித்திரைச்சாவடி அணைக்கட்டிலிருந்து, வினாடிக்கு, 200 கன அடி தண்ணீர், வாய்க்காலில் செல்கிறது. வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், "பாலக்காடு கணவாய் மற்றும் மேற்கு பகுதிகளில் மழைப்பொழிவு காணப்படும். வரும், 20-ம் தேதி வரை இடைவெளி விட்டு மழை பெய்யும். குளங்களுக்கு நீர் வரத்து இருக்கும். அணைகளின் நீர்மட்டம் உயரும்," என்றார்.