கோவை நல்லாயன் துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல்-மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு..!

கடந்த 5-நாட்களாக வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் ஆகியவை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் முடிவுகள் 8-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.


கோவை: கோவை நல்லாயன் துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.



கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்கப் பள்ளியில் மாணவர்களின் எதிர் காலத்திற்கு பயன்படும் வகையில், தேர்தல் விதிமுறைகள் தேர்தல் நடத்தும் வழிமுறைகள், தேர்தலில் போட்டியிடும் முறைகள், பிரச்சாரம், வாக்களிக்கும் முறைகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவர் தேர்தல் நடைபெற்றது.



இதில், பள்ளிக்கான 5 (மாணவர் தலைவர், துணை தலைவர், விளையாட்டுத்துறை, உணவுத்துறை, சுற்றுச்சூழல் துறை) துறைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் 3 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் நடைபெறும் முறை போலவே மாணவர்களுக்கு பூத் சிலிப் (மாதிரி) வழங்கப்பட்டு, விரலில் மை இட்டு, கணினி மூலம் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் பள்ளி 5-ம் வகுப்பு மாணவர்கள் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். இந்த தேர்தலில், அப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வாக்களித்தனர்.



கடந்த 5 நாட்களாக வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் ஆகியவை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் முடிவுகள் 8ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

பள்ளி மாணவர்கள் தேர்தல் முறைகள் பற்றி இந்த சிறுவயதிலேயே அறிந்து கொள்ளும் வண்ணம் இது போன்று தேர்தல் நடத்தப்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.



Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...