எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோவையில் போஸ்டர்..!

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் "உள்ளாட்சி இடைத் தேர்தலில் கட்சி சின்னத்தை பெற ஓபிஎஸ் கையெழுத்து போட தயார் என அழைத்தும் கையெழுத்து போட மறுத்து புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னத்தை முடக்கிய எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் கண்டனம்" என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.


கோவை: எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோவையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.



அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பன்னீர் செல்வத்திற்கு எதிராகவும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு வழிகளில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் சார்பில், எடப்பாடி பழனிச்சாமியை தலைமை ஏற்க அழைக்கும் படி கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.



இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள்"உள்ளாட்சி இடைத் தேர்தலில் கட்சி சின்னத்தை பெற ஓபிஎஸ் கையெழுத்து போட தயார் என அழைத்தும் கையெழுத்து போட மறுத்து புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னத்தை முடக்கிய எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் கண்டனம்" என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் கழக செய்தி தொடர்பாளர் புகழேந்தியின் சார்பில் போஸ்டர்கள் கோவை மாநகரில் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...