கோவையில் பைக்கில் அதிக சத்தத்துடன் கூடிய சைலன்சர் பொருத்தி, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் இளைஞர்கள்..!

அதிக ஒலி எழுப்பும் வகையில் சைலன்ஸர்கள் பொருத்துவது போக்குவரத்து விதிமீறல் ஆகும். வாகன தணிக்கையின் போது, இதுபோன்ற விதிமீறல்கள் கண்டறிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் - ஆர்.டி.ஓ அதிகாரிகள் எச்சரிக்கை.



கோவை: சம்மீபத்தில், கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக சத்தத்துடன் கூடிய சைலன்சர்களை, பைக்கில் பொருத்தி அதிவேகமாக வாகனங்களை இயக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வகையானவிதி மீறல்களால், ஒலி மாசு மட்டுமல்லாது, சக வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்வோர் பீதி அடைந்து வருவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வழக்கமாக, இரு சக்கர வாகனங்களில் வரும் ஒரிஜினல் சைலன்ஸர்களுக்கு மாற்றாக, அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை வண்டிகளில்பொருத்தி அதிவேகமாக வாகனங்களை இயக்கி வரும் இளைஞர்களால், பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதீத சத்தம் எழுப்பும் இந்த வாகனங்களால், இயல்பாக சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பீதி அடைந்து வருவதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள், சாலையில் செல்பவர்கள் மட்டுமல்லாது, வீட்டில் உள்ளவர்கள் கூட இது போன்ற வாகனங்கள் அவர்களது சாலைகளில் செல்லும்போது மிகுந்த எரிச்சல் அடைகின்றனர். அந்த அளவுக்கு இந்த இரு சக்கர வாகனங்களில் வைக்கப்பட்டுள்ள சைலன்ஸர்களிலிருந்து வரும் ஒலி மோசமாக உள்ளது, என்கின்றனர்.

பல இருசக்கர வாகனங்களில் இது போன்ற அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்தப்பட்ட போதும், புல்லட், யமஹா மற்றும் அதிக சிசி திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் வாகனங்களில் தான் இது போன்ற அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்கள் அதிக அளவு

பொருத்தபடுகின்றன. இவற்றை "த்ரில் மற்றும் ஸ்டைலுக்காக" பைக்கில் பொருத்தும் இளைஞர்கள், பின் விளைவுகள் பற்றி கவலையின்றி சாலைகளில் சாகசங்கள் செய்து வருகின்றனர், என்ற புகார்கள் எழுந்தன வண்ணம் உள்ளன.

கோவை சிறுவாணி சாலை, பந்தைய சாலை, தடாகம் சாலை, அவிநாசி சாலை மற்றும் மேம்பாலங்களில், இது போன்ற அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் பொருத்திய பைக் மற்றும் கார்களை "ரேசிங்" தளத்தில் ஓட்டுவது போன்று மின்னல் வேகத்தில், வளைத்து வளைத்து ஓட்டிச் செல்வது ஒரு ட்ரெண்டாக மாறி வருகிறது, என்கின்றனர் பந்தைய சாலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள்.

போக்குவரத்து காவலர்களிடம் இருந்து தப்பிக்க, பிரதான சாலைகளில் செல்லாமல், மாற்று சாலைகளில் செல்லும் இவர்களால், விபத்து மற்றும் குடியிருப்போருக்கு பெரும் அவதி ஏற்பட்டு வருகிறது. இவர்களது அட்டூழியத்தை கண்டுகொள்ளாமல் விட்டால், இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களை வாகனங்கள் பொருத்தினால் கடும் நடவடிக்கை..!

இது குறித்து நம்மிடம் பேசிய ஆர்டிஓ அதிகாரிகள், "ஒவ்வொரு வாகனங்களிலும் அந்த வாகனங்களுக்கு ஏற்ப சைலன்ஸர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படுகின்றன. அவற்றை மாற்றி அமைத்து அதிக ஒலி எழுப்பும் வகையில் சைலன்ஸர்கள் பொருத்துவது போக்குவரத்து விதிமீறல் ஆகும். அதிகாரிகள் நடத்தும் வாகன தணிக்கையின் போது, இதுபோன்ற விதிமீறல்கள் கண்டறிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்", என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விதிமீறலை தடுக்க என்ன வழி..?

வழக்கமான வாகன தணிக்கை மட்டுமின்றி, கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற விதி மீறல்களில் ஈடுபட்டு உள்ளவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை மற்றும் ஆர்டிஓ அதிகாரிகள் ஒரு வாட்ஸ்அப் எண்ணை பொதுமக்களுக்கு தெரிவிக்கலாம்.

அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்கள் பொருத்திய வாகனங்கள் குறித்த விபரங்களை புகைப்படத்துடன் அல்லது நம்பர் பிளேட் விபரங்களுடன் அந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தலாம். இதனால் எதிர்வரும் நாட்களில், இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை முற்றிலும் குறைய வாய்ப்பு ஏற்படும்.

ஹைதராபாத்தில் ஒரே நாளில் 1,000 சைலன்ஸர்கள் அகற்றம்..!

அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை இருசக்கர வாகனங்களில் பொருத்திய நபர்களை கண்டறிய கடந்த சில தினங்களுக்கு முன் ஐதராபாத் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக, ஒரே நாளில் ஆயிரம் அதிக எழுப்பும் சைலன்சர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஐதராபாத் போல கோவையிலும், கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இந்த விதி மீறல்களை கட்டுபடுத்த முடியும். 

நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து இடங்களிலும், போக்குவரத்து போலீசார் மற்றும் ஆர்டிஓ அதிகாரிகள் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை இருசக்கர வாகனங்களில் இருந்து அப்புறப்படுத்தி, அந்த கவாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அப்போது தான் மக்கள் நிம்மதியாக அச்சமின்றி பயணிக்க  முடியும், என்பதே கோவை மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.   

ஏற்கனவே, கோவையில் விபத்துகள் நாளுக்குள் நாள் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரால் மேலும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும், என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர் மக்கள். 

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...