கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை..!

மாநகராட்சி, தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.76-க்குட்பட்ட தெலுங்குபாளையம்‌, சோமுகார்டன்‌ பகுதியில்‌ ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்நல மையம்‌ கட்டுமானப்பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்‌.


கோவை: மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ பல்வேறு திட்டபணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.76-க்குட்பட்ட தெலுங்குபாளையம்‌, சோமுகார்டன்‌ பகுதியில்‌ ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்நல மையம்‌ கட்டுமானப்பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்‌.

பின்னர் மாநகராட்சி, தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.78க்குட்பட்ட செல்வபுரம்‌ ஹவுசிங்யூனிட்‌ பகுதியில்‌ தலா ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்நல மையம்‌ கட்டுமானப்பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார்‌.



இதனிடையே,‌ மாநகராட்சி, தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.79க்குட்பட்ட செல்வபுரம்‌ முத்துசாமி காலனி, எல்‌.ஐ.சி.காலனி, தில்லை நகர்‌ ஆகிய பகுதிகளில்‌ மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.12 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ ஆழ்குழாய்‌ கிணறுகளுக்கு மோட்டர்‌ பழுது பார்த்தல்‌, குழாய்‌ மாற்றி அமைத்தல்‌ மற்றும்‌ கல்லாமேடு பகுதியில்‌ ஆழ்குழாய்‌ கிணறு அமைக்கும்‌ பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌ பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார்‌.



மேலும் மாநகராட்சி, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.30க்குட்பட்ட கணபதி அரசு பள்ளி அருகில்‌ 24 மணி நேர குடிநீர்‌ குழாய்‌ பதிக்கும்‌ பணியை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



‌இந்நிகழ்ச்சியில்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷர்மிளா, மதிப்பிற்குரிய துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, நகரமைப்பு குழுத்தலைவர்‌ சோமு (எ) சந்தோஷ்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ வசந்தாமணி, ராஜ்குமார்‌, சிவசக்தி, அப்துல்‌ காதர்‌, உதவி செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, உதவி பொறியாளர்‌ ஏஞ்சலினா, மண்டல சுகாதார ஆய்வாளர்‌ ராமு மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடன் இருந்தனர்‌.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...