கோவை வால்பாறையில் இரவில் வனவிலங்குகளை சுற்றிப் பார்க்க சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனம் பறிமுதல்..!

இரவு நேரத்தில் வன விலங்குகளை தொந்தரவு செய்யும் வண்ணம் சட்டவிரோதமாக வாகனத்தில் சென்று விலங்குகளை பார்க்க சென்றதால் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 70-ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறையில் இரவில் வன விலங்குகளை சுற்றிப் பார்க்க சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனம் பறிமுதல் 70-ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட வால்பாறை பகுதியில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. இதைப் பார்க்க பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சட்டவிரோதமாக இரவில் சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை பார்க்க தங்கள் சொந்த வாகனங்களிலும் வாடகை கார் களிலும் செல்லுகின்றனர். இது போன்று செயல்களால் வனவிலங்கு மோதல் நடைபெறுகிறது. வன விலங்குகளும் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

வனத்துறை தங்கும் விடுதிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இரவில் வன விலங்குகளை தொந்தரவு செய்யும் வண்ணம் வாகனத்தை செலுத்தவும், அதிக பவர் கொண்ட லைட், மேலும் வன பகுதியில் சத்தம் எழுப்பவும்கூடாது, இதை பின்பற்ற வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதை மீறி வால்பாறையில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் உள்ள சுற்றுலா பயணிகள் இரவில் வன விலங்குகளை பார்க்க செல்கின்றனர். வால்பாறை வன சரகத்தில் கருமலை, அக்கமலை, பச்சமலை, பாரளை, வில்லோனி, போன்ற இடங்களுக்கு நேற்று இரவில் இரண்டு வாகனத்தில்10-க்கும்மேற்பட்ட சுற்றுலா பயணிகளை வன விலங்குகளை காண்பிக்க சென்று உள்ளனர்.



இரவு நேரத்தில் வன விலங்குகளைதொந்தரவு செய்யும் வண்ணம் சட்டவிரோதமாகவாகனத்தில் சென்று விலங்குகளை பார்க்க சென்றதால் இரண்டு வாகனங்களைவால்பாறை வனத்துறை சரகர் வெங்கடேஷ் பறிமுதல் செய்தார்.

இரண்டு வாகனங்களுக்கும் டிரைவர் ஜீவா, கலையரசன் ஆகியோர்களுக்கு தலா 25 ஆயிரமும் தனியார் தங்கும் விடுதிக்கு 20 ஆயிரம்மொத்தம் 70 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...