வார்டு எண்.33-க்குட்பட்ட பகுதியில் பழுது ஏற்பட்ட குழாய்களை சீரமைத்து குடிநீரை சீராக விநியோகம் செய்ய கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவு..!

கவுண்டம்பாளையம்‌ பகுதியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, குடிநீர்‌ விநியோகம்‌ பாதிக்காத வகையில்‌ போர்க்கால அடிப்படையில்‌ பழுதடைந்துள்ள குழாய்களை உடனடியாக சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.


கோவை: வார்டு எண்.33-க்குட்பட்டபகுதியில் பழுது ஏற்பட்ட குழாய்களை சீரமைத்து குடிநீரை சீராக விநியோகம் செய்ய கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ ‌உத்தரவிட்டுள்ளார்.

கோவை‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, 17-வது வார்டுக்குட்பட்ட பகுதியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு, அப்பகுதியில்‌ உள்ள மழைநீர்‌ வடிகாலை தூர்வாரி மழைநீர்‌ தடையின்றி சீராக செல்ல வழிவகை செய்யவும்‌, ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌.



பின்னர் மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, 33-வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம்‌ பகுதியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, குடிநீர்‌ விநியோகம்‌ பாதிக்காத வகையில்‌ போர்க்கால அடிப்படையில்‌ பழுதடைந்துள்ள குழாய்களை உடனடியாக சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இதனிடையே, மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ கவுண்டம்பாளையம்‌ பகுதியில்‌ மின்‌ உற்பத்தி செய்யும்‌ சோலார்‌ பேனல்‌ உற்பத்தி மையத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்‌.



இந்த ஆய்வின் போது,‌ உதவி ஆணையர்‌ (பொ) சரவணன்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌ செந்தில் பாஸ்கர்‌, ஹேமலதா, உதவி பொறியாளர்கள்‌ ஜீவராஜ்‌, ராஜேஸ்‌ வேணுகோபால்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ பரமசிவம்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ கிருஷ்ணமூர்த்தி, சுபஸ்ரீசரத்‌, சுகாதார ஆய்வாளர்‌ சலைத்ராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடன் இருந்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...