கவுண்டம்பாளையம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு, குடிநீர் விநியோகம் பாதிக்காத வகையில் போர்க்கால அடிப்படையில் பழுதடைந்துள்ள குழாய்களை உடனடியாக சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
கோவை: வார்டு எண்.33-க்குட்பட்டபகுதியில் பழுது ஏற்பட்ட குழாய்களை சீரமைத்து குடிநீரை சீராக விநியோகம் செய்ய கோவை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 17-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலை தூர்வாரி மழைநீர் தடையின்றி சீராக செல்ல வழிவகை செய்யவும், ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் மாநகராட்சி மேற்கு மண்டலம், 33-வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு, குடிநீர் விநியோகம் பாதிக்காத வகையில் போர்க்கால அடிப்படையில் பழுதடைந்துள்ள குழாய்களை உடனடியாக சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனிடையே, மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் பகுதியில் மின் உற்பத்தி செய்யும் சோலார் பேனல் உற்பத்தி மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் (பொ) சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில் பாஸ்கர், ஹேமலதா, உதவி பொறியாளர்கள் ஜீவராஜ், ராஜேஸ் வேணுகோபால், மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், மாமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுபஸ்ரீசரத், சுகாதார ஆய்வாளர் சலைத்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.