கோவை ஈச்சனாரி அருகே ஆம்னி பேருந்து - டைல்ஸ் லோடு ஏற்றி வந்த லாரி மோதி விபத்து..!

கோவை ஈச்சனாரி அருகே ஆம்னி பேருந்து - டைல்ஸ் லோடு ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 4-பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோவை:கோவை ஈச்சனாரி அருகே ஆம்னி பேருந்து - டைல்ஸ் லோடு ஏற்றி வந்த லாரி மோதிய விபத்து குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக கோவை வந்த ஆம்னி பேருந்து கோவை ஈச்சனாரி சந்திப்பு அருகே வந்த போது, சேலத்தில் இருந்து கேரளா நோக்கி டைல்ஸ் லோடு ஏற்றிச் சென்ற லாரி, ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதியது.



இந்த விபத்து பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து, சாலையில் சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் 4 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து மதுக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...